கொல்கத்தா:
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் நார்கேல்தங்கா பகுதியில் உள்ள குழந்தைகள் பூங்காவினுள் நேதாஜி சுபாஷ் சந்திர போஷ் சிலை நிறுவப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட இந்த மார்பளவு சிலையினை புதனன்று இரவு யாரோ மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.

வியாழனன்று காலை பூங்காவிற்கு சென்ற பொதுமக்கள், சிலை உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் பரவியதையடுத்து அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். சிலையை உடைத்த நபர்களை கைது செய்ய வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: