புனே:
மகாராஷ்டிராவின் தற்போதைய ஆளுநராக வித்யாசாகர் ராவ் இருக்கிறார். மகாராஷ்டிராவின் ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் இருந்த 5 சந்தன மரங்கள் மர்ம நபர்களால் வெட்டி கடத்தப்பட்டுள்ளன. ஏப்ரல் 30 ஆம் தேதி இரவு நடைபெற்ற கொள்ளை சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை இணை ஆணையர் ரவீந்திர கடம் பேசுகையில், ராஜ் பவனின் பாதுகாப்பினை போதுமான அளவில் அதிகப்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். ராஜ் பவன் வளாகத்தில் சிசிடிவி கேமரா வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிசிடிவி கேமரா வசதி செய்து தருவதற்கான கோரிக்கை கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் புனே நகர காவல்துறையிடம் நிலுவையில் உள்ளது என்றும் ராஜ் பவன் வட்டாரம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.