புதுதில்லி:
மத்திய அரசு, சர்க்கரை ஆலைகளில் கரும்பு விவசாயிகளுக்கு அளிக்கவேண்டிய நிலுவைத் தொகைகளை வழங்குவதற்கு உதவக்கூடிய விதத்தில், 2017-18 பருவத்திற்கு, குவிண்டாலுக்கு ரூ.5.5 மானியத்தொகை வழங்க ஒப்புதல் அளித்திருப்பதாகவும், இதன் காரணமாக கரும்பு விவசாயிகளுக்கு அளிக்கவேண்டிய நிலுவைத் தொகையில்19 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக அளிக்கப்பட்டுவிடும் என்றும் அரசால் கூறப்பட்டிருக்கிறது.

மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இது தொடர்பாக ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இந்த உதவியானது, ஆலைகள் சார்பாக கரும்பு விவசாயிகளுக்கு நேரடியாகவே பட்டுவாடா செய்யப்பட்டுவிடும் என்று கூறியிருக்கிறது. இந்தத் தொகை நியாயமான மற்றும் கட்டுபடியாகக் கூடியதும், ஆலைகள் விவசாயிகளுக்குத் தரவேண்டியதுமான குவிண்டாலுக்கு 255 ரூபாய் என்ற தொகைக்காக சரிசெய்யப்படும் என்றும் அரசுத்தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

விவசாயிகளுக்கு இவ்வாறு தொகையினை அளித்தபின்பு மேலும் நிலுவைத்தொகை இருக்குமாயின், அது ஆலைகளின் கணக்கில் வைக்கப்படும் என்றும் அரசாங்கத்தின் தகுதி தொடர்பான நிபந்தனைகளை ஆலைகள் பூர்த்திசெய்தபின் உதவித்தொகை ஆலைகளுக்கு வழங்கப்படும் என்றும் அரசுத்தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.