கோலாலம்பூர்:
சர்வதேச பேட்மிண்டன் அமைப்பான பி.டபிள்யு.எப். இந்த மாதத்திற்கான தரவரிசை பட்டியலை வியாழனன்று வெளியிட்டது.இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் இரண்டு இடங்கள் முன்னேறி 3-வது இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த சில வாரங்களாக 10-வது இடத்தில் நீடித்து வந்த இந்தியாவின் பிரணாய்,ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் வெண்கலப்பதக்கம் வென்றதன் மூலம் இரண்டு இடங்கள் முன்னேறி 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.மற்றொரு இந்திய வீரரான சாய்பிரனீத் 18-வது இடத்தில் நீடிக்கிறார்.

Leave A Reply

%d bloggers like this: