சண்டிகர்:
அரியானா மாநிலம் குருகிராமத்தில் கடந்த மே 1 ஆம் தேதி இரவு வீடு திரும்புவதற்கு பேருந்திற்காக காத்திருந்த 19 வயது இளம் பெண்ணை ஆட்டோவில் வருமாறும் குறைந்த கட்டணம் பெற்றுக் கொள்வதாகவும் பேசி, ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அந்த பெண்ணை ஏற்றிச் சென்றுள்ளார்.

அதைத் தொடர்ந்து ஆட்டோவில் ஏறிய 4 பேர் அந்த பெண்ணிற்கு தூக்க மருந்து கலந்த பானத்தை வற்புறுத்தி கொடுத்துள்ளனர். இதனால் மயக்கமடைந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு தப்பியோடினர். இச்சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.