பெய்ஜிங்:
கடந்த வாரம் சீனா சென்றிருந்த பிரதமர் மோடி, வூகன் நகரில் அந்நாட்டின் ஜனாதிபதி ஜி ஜின் பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.எல்லைப் பாதுகாப்பு விஷயத்தில் இரு தரப்பு ராணுவங்கள் இடையே தகவல் பரிமாற்றங்களை வலுப்படுத்திக் கொள்வது, நம்பிக்கையை வளர்த்துக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்திய – சீன ராணுவங்கள் இடையே தகவல் பரிமாற்றத்திற்காக நேரடி தொலைபேசி சேவை உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மிக நீண்ட காலமாக இருந்து வருகிற கோரிக்கை ஆகும்.

இது தொடர்பாக சீன அரசின் ‘குளோபல் டைம்ஸ்’ ஏடு வெளியிட்டு உள்ள செய்தியில், ‘இரு தலைவர்களும் நடத்திய பேச்சுவார்த்தையின்போது, தங்கள் ராணுவங்கள் இடையே தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு ஹாட்லைன் தொலைபேசி சேவையை உருவாக்குவதற்கு சம்மதம் தெரிவித்து உள்ளனர்’ எனக் கூறியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.