மெல்போர்ன்:
தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின் போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்,துணை டேவிட் கேப்டன் வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு தடையும்,புதுமுக வீரர் பான்கிராப்ட்க்கு 9 மாத தடை விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கை எடுத்தது.பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் வீரர்கள் செய்த தவறுக்கு பொறுப்பேற்று பயிற்சியாளர் டேரன் லிமேனும் பதவி விலகினார்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தொடக்க வீர்ர் ஜஸ்டின் லாங்கர் (47) புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.ஜஸ்டின் லாங்கர் டெஸ்ட்,ஒரு நாள் மற்றும் டி-20 என அனைத்து விதமான போட்டிகளுக்கும் தலைமை பயிற்சியாளராக செயல்படுவார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.மே 22-ஆம் தேதி முதல் பயிற்சியாளராக பொறுப்பேற்கும் ஜஸ்டின் லாங்கர்,ஆஸ்திரேலிய அணிக்காக 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 23 சதங்களுடன் 7696 ரன்கள் குவித்துள்ளார்.ஒரு நாள் போட்டிகளில் ஆர்வம் இல்லாத ஜஸ்டின் லாங்கர் 8 ஒரு நாள் போட்டிகளில் மட்டும் விளையாடி 160 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.