செங்கல்பட்டு:
2019ம் ஆண்டு தேர்தலில் மதசார்பற் கட்சிகளை இடதுசாரிகள் ஒருங்கிணைக்க வேண்டும் என செங்கல்பட்டில் விடுதலை சிறுத்தைகள்கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்தார்.

செங்கல்பட்டில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இரண்டாவது முறையாக சீத்தாராம் யெச்சூரி தேர்வு செய்யப்பட்டுள்ளார், அதேபோல இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார் ஆகவே இருவரையும் புதுடில்லியில் சமீபத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தோம். அத்துடன் 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற சக்திகளின் வாக்குகள் சிதரிவிடக்கூடாது என்பதற்காக அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் இடதுசாரிகள் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவித்தோம்.

வன்கொடுமை சட்டத்தை வன்கொடுமை சட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் போராட்டத்தை நடத்தியதற்காக ராகுல் காந்திக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டோம். தமிழக முதல்வர் டெல்லி சென்றுள்ளது குறித்துக் கேட்டதற்கு தமிழக அரசு ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைப்பதற்காகத் தமிழக நலன்களை பலிகொடுத்திடக் கூடாது ஆளும் அதிமுகவுக்கு அது நீங்கா கறையாகி விடும். அதை புரிந்துக்கொண்டு தமிழக முதல்வர் பிரதமரிடம் அழுத்தம் கொடுப்பார் என நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்

Leave a Reply

You must be logged in to post a comment.