மதுரை:
நெல்லை மாணவர் தினேஷ் தற்கொலைக்கு தமிழக அரசுதான் பொறுப்பு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தையொட்டி மதுரையில்
கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் நடைபெறுகின்ற போராட்டம், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு எந்தவித முயற்சியும் எடுக்காதது, மாநில அரசு, மத்திய அரசுக்கு எந்தவித அழுத்தத்தையும் கொடுக்காதது, சட்டம்- ஒழுங்கு பிரச்சனை, குட்கா ஆலை கோவையில் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் உள்ளிட்ட அரசியல் சூழ்நிலை குறித்து மாநிலக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன.வருகின்ற 6 ஆம் தேதி தமிழக மாணவர்களுக்கு நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு இன்று வரை தேர்வு இடம் அறிவிக்கவில்லை. இது மிகவும் கண்டனத்திற்குரியதாகும். நெல்லை மாணவர் தினேஷ் தனது தந்தையின் குடிப்பழக்கம் காரணமாக தற்கொலை செய்து கொண்டது வருத்தத்தைத் தருகிறது. இதன் பிறகாவது டாஸ்மாக் கடையை அடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு இதுகுறித்து கண்டுகொள்ளவில்லை.

இந்த தற்கொலைக்கு தமிழக அரசுதான் முழுப் பொறுப்பு. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்று மக்கள் போராட்டங்கள் நடத்தும் போது, அரசு டாஸ்மாக் கடைகளை மூட மறுக்கின்றது. அதனால் தினேஷ் தற்கொலைக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும். மேலும் மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல்,மதுக்கடையை எதிர்த்து போராட வேண்டும்.

பேராசிரியை நிர்மலா தேவி விவ காரத்தில் ஆளுநர் உள்பட உயர் அதிகாரி
கள் சம்பந்தப்பட்டிருப்பதால் தமிழக ஆளுநரை மாற்றக்கோரி மத்திய அரசுக்கு கடிதம்
அனுப்பியுள்ளோம். மேலும் தமிழக அர சின் சி.பி.சி.ஐ.டி விசாரணை மந்தமாக நடை பெறுகிறது. உயர்நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலன் விசாரணைக்குழு அமைத்து விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளிவரும் என்றார்.

செய்தியாளர் சந்திப்பின்போது அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்,
மத்தியக்குழு உறுப்பினர் கே.வரதராசன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.