புதுதில்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும்,இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பணியாற்றி வரும் ராகுல் டிராவிட் பெயரை துரோணச்சாரியா விருதுக்கு பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியானது.இந்தச் செய்திக்கு இந்திய கட்டுப்பாட்டு வாரியம் தற்போது மறுப்பு தெரிவித்துள்ளது.ராகுல் டிராவிட்டின் சிறப்பான பயிற்சி மூலம் இந்திய ஜூனியர் அணி 2017-ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது எனவும்,கோப்பையை வென்று கொடுத்த டிராவிட்டுக்கு துரோணச்சாரியா விருது வழங்க பிசிசிஐ பரிந்துரை செய்திருப்பதாக செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.