கிருஷ்ணகிரி:
விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டிருந்த நிலையில் கிருஷ்ணகிரி அருகே சிறப்பு வகுப்புக்குச் சென்ற தனியார் பள்ளி மாணவர் விபத்தில் பலியானார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், அவதானப்பட்டி கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகன்
பிரவீன். இவர் தருமபுரி மாவட்டத் தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவர் புதனன்று காலை சிறப்பு வகுப்பிற்கு செல்வதற்காக பள்ளி பேருந்தை பிடிப்பதற்காக உற வினருடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.காவிரிப்பட்டணம் கூட்டுச்சாலை யில் வந்த போது பின்னால் வந்த கார்,இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் மாணவன் பிரவீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வாகனத்தை ஓட்டிச் சென்ற சத்யா பலத்த காயங்களு டன் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அரசின் உத்தரவுகளை தனியார் பள்ளிகள் ஒருபோதும் மதிப்பதில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: