திருநெல்வேலி மாவட்டத்தில் தந்தை குடிப்பதால் விரத்தி அடைந்த மகன் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன் தந்தைக்கும், மதுக்கடையை மூட மோடி, எடப்பாடிக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில் தாலுகா பகுதியை சார்ந்த தினேஷ் நல்லசிவம் என்ற பத்தாம் வகுப்பு முடித்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மாணவன் இருப்பதற்கு முன்பு தற்கொலைக்கான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் ஆவர் கூறுகையில், அதில் அவருடைய அப்பா குடிப்பதால் வேதனை அடைந்து இந்த முடிவு எடுப்பதாகவும், அவரது இறுதி சடங்கை அப்பா செய்யக்கூடாது என்றும் கூறிப்பிட்டது.

மேலும் இந்தியாவின் பிரதமர், தமிழகத்தின் முதலமைச்சர் இனியாவது மூட வேண்டும் என்று கோரிக்கை ஒன்றையும் எழுதியுள்ளார், மதுபான கடைகளை மூட வில்லை என்றால் ஆவியாக வந்து மதுபான கடையை ஒழிப்பேன் என்றும் அந்த கடிதத்தில் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: