புதுதில்லி:
காவிரி நதிநீர் பங்கீட்டு விஷயத்தில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சீர்குலைக்கும் வேலையில் மத்திய பாஜக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களும் காவிரி நதிநீர் பங்கீட்டுக் கொள்வதற்கான ‘திட்டம்’ ஒன்றை 6 வாரங்களுக்குள் ஏற்படுத்த வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், 6 வாரங்களும் வெறுமனே இருந்து விட்டு, 3 மாதம் கூடுதல் அவகாசம் கேட்டு மோடி அரசு உச்ச நீதிமன்றம் சென்றது. அப்போது, உச்ச நீதிமன்றம் கூறியபடி, மார்ச் 29-ஆம் தேதிக்குள் காவிரி நதிநீர் பங்கீட்டுத் திட்டத்தை அமல்படுத்தாதது ஏன்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தீர்ப்பில் சந்தேகம் இருந்தால், முன்னதாகவே அணுகுவதை விட்டுவிட்டு, கடைசி நேரத்தில் வந்து, 3 மாத காலம் அவகாசம் கோருவது மிகவும் தவறானது என்று சாடினர்.

மேலும், காவிரி நதிநீர் பங்கீட்டுக்கான வரைவு செயல் திட்டம் ஒன்றைத் தயாரித்து, அதனை மே 3-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் உத்தரவிட்டனர். அதன்படி இரண்டாவது முறையாக வழங்கப்பட்ட அவகாசமும் வியாழக்கிழமையுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், “மத்திய அரசு கூறியபடி வரைவு அறிக்கை இன்னும் தயாராகவில்லை; அதனால் காவிரி வழக்கை 2 வாரங்களுக்கு அதாவது மே 16-ந் தேதி வரை ஒத்திவைக்க வேண்டும்” என மத்திய பாஜக அரசு புதன்கிழமையன்றே உச்ச நீதிமன்றத்திற்கு ஓடியது.

ஆனால், மத்திய அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது. காவிரி மேலாண்மை வாரியம் குறித்த வரைவு அறிக்கையை வியாழக்கிழமையன்று தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் குறித்த வரைவு அறிக்கையை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யாது என்றே மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

%d bloggers like this: