சென்னை:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திரைத்துறையினர் 5 ஆயிரம் பேர் கையெழுத்திட மனுவை புதனன்று நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குநர்கள் சங்கத்தினர் ஆளுநரிடம் அளித்தனர்.

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில், நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத் தலைவர் பொன்வண்ணன், தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், இயக்குநர்கள் சங்க தலைவர்
விக்ரமன், ஃபெப்சி அமைப்பின் தலைவர் செல்வமணி உள்ளிட்டோர் தமிழ்நாடு ஆளுநர்
பன்வாரிலாலை சந்தித்தனர்.

சந்திப்பிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் நடிகர் சங்க தலைவர் நாசர் கூறியதாவது: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திரைத்துறையினர் 5 ஆயிரம் பேர் கையெழுத்திட மனுவை ஆளுநரிடம் அளித்துள்ளோம். காவிரி மேலாண்மை வாரியம் 2 வாரத்தில் அமையும் என ஆளுநர் நம்பிக்கைத் தெரிவித்ததாகவும் மனுவை முதலமைச்சருக்கு அனுப்புவதாகவும் ஆளுநர் கூறியதாக நாசர் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.