ஐபிஎல் தொடரின் 11-வது சீசன் போட்டிகள் ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.ஒவ்வொரு சீசனிலும் சூதாட்ட புகார்கள் அதிகரித்து வருவதால் காவல்துறையினர் சிறப்பு குழு அமைத்து மறைமுகமாகக் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் மேற்கு தில்லி ராஜா கார்டன் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபடுவதாகக் காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.ராஜா கார்டன் பகுதியில் துரித ஆய்வு மேற்கொண்ட காவல்துறை 5 பேரைக் கைது செய்து துரித விசாரணை மேற்கொண்டது.

விசாரணையில் திங்களன்று நடைபெற்ற தில்லி – சென்னை அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கைதானவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: