திருப்பூர்,
முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்றவர்களை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி பாராட்டினார்.

2017- 2018 – ம் ஆண்டிற்கான மாநில அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான தடகள போட்டி 24 முதல் 26வரை சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது.  இப்போட்டியில் ,திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கமல்ராஜ், ராகுல் ஆகிய வீரர்கள் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் ரூ.100000 மற்றும் வெள்ளி பதக்கம் ரூ.75000பெற்று திருப்பூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்கள். மேலும், இவ்வீரர்களை மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி பாராட்டி தொடர்ந்து நடைபெறும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்குமாறு தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஜா.பியுலா ஜேன் சுசிலா உடன் இருந்தார்.

Leave A Reply

%d bloggers like this: