பொள்ளாச்சி,
பொள்ளாச்சி வழியாக செல்லும் நெல்லை ரயில்களை ரத்து செய்த தென்னக ரயில்வே துறையைக் கண்டித்து பொள்ளாச்சியில் அனைத்து அரசியல் கூட்டியக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையிலிருந்து பொள்ளாச்சி வழியாக செங்கோட்டை மற்றும் நெல்லை வரை இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில்களை ரத்து செய்வதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதனை கண்டித்து திங்களன்று பொள்ளாச்சியில் அனைத்து அரசியல் கட்சி மற்றும் கூட்டியக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில கழக வெளியீட்டு செயலாளர் இரா.மனோகரன் தலைமை வகித்தார்.

இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் பொள்ளாச்சி தாலுகா செயலாளர் கே.மகாலிங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் ச.பிரபு, தமிழ்குமரன், மதிமுக மாவட்ட செயலாளர் செந்தில், நகரச்செயலாளர் துரைபாய், திமுக தொழிற்சங்க செயலாளர் கண்ணுசாமி, தமுமுக சார்பில் கபூர், மஜக முஸ்தபா, ஆதித்தமிழர் பேரவை கோபால் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: