கோவை,
கோவையில் பார்வையற்றோருக்கான இலவச கணினி பயிற்சி வகுப்புகள் மற்றும் முப்பெரும் விழா செவ்வாயன்று கொண்டாடப்பட்டது.

கோவை மாவட்டம், உப்பிலிபாளையத்தில் இயங்கி வரும் தேசிய பார்வையற்றோர் இணைய மேற்கு கிளை அலுவலக வளாகத்தில் இணையத்தின் 40வது ஆண்டு விழா, பார்வையற்றோருக்கான கணினி பயிற்சி துவக்க விழா மற்றும் மே தின சிறப்பு விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு இணையத்தின் தென்னிந்திய திட்ட இயக்குனர் பி.மனோகரன் தலைமை தாங்கினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பார்வையற்ற உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அருசிபாளையம் ஆறுமுகம், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக முதியோர் இல்லம் தொடங்க இணையத்திற்கு 32 சென்ட் நிலத்தை இலவசமாக வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அம்பேத்கர் கல்வி மற்றும்  தொழில் பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கணேஷ், துணை ஒருங்கிணைப்பாளர் இந்துமதி மற்றும் உள்ளாட்சி நிதி தணிக்கை ஆய்வாளர் சோமசுந்தரம், ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.