திருப்பூர்,
மே தின விழா எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு சார்பில் குடியிருப்புப் பகுதிகள், தொழிற்சாலை, மார்கெட், ஆட்டோ, சரக்கு வேன் ஸ்டாண்ட் உள்ளிட்ட நகரெங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் செங்கொடி ஏற்றப்பட்டு மே தின விழா சிறப்பாக கடைப்பிடிக்கப்பட்டது.

திருப்பூர் ரயில்வே கூட்செட்டில் சிஐடியு சுமைப்பணித் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மே தின விழாவிற்கு சங்கத் தலைவர் எஸ்.எம்.பழனிசாமி தலைமை வகித்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்று செங்கொடியை ஏற்றி வைத்து மே தின சிறப்புரை ஆற்றினார். மேலும், இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

சேலம்:
சேலத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு அலுவலகமான சேலம் சிறை தியாகிகள் நினைவகத்தில் நடைபெற்ற மேதின விழாவில் கட்சியின் மூத்த தோழர் பி.தர்மலிங்கம் செங்கொடியினை ஏற்றிவைத்தார். இதில் மாவட்டச் செயலாளர் பி.ராமமூர்த்தி உள்ளிட்ட மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டபலர் பங்கேற்றனர். இதேபோல், சேலம் மேற்கு மாநகர குழு சார்பில் அரியாக்கவுண்டம்பட்டி, காசக்காரனூர், கோனேரிகரை, மூளப்பிளைளயார் கோவில் உள்ளிட்ட 35 இடங்களில் மே தினம் கொண்டாடப்பட்டது. சேலம் வடக்கு மாநகர குழு சார்பில் சேலம் மத்திய சிறை, கோட்டை, பெரமனூர், சாமிநாதபுரம், சின்னேரிவயல் உள்ளிட்டு 18 இடங்களில் செங்கோடி ஏற்றி மே தினம் கொண்டாடப்பட்டது. மேலும், சேலம் தாலுகா குழு சார்பில் 42 இடங்கள், ஓமலூர் பகுதியில் 30 இடங்கள், வாழப்பாடி இடைக் கமிட்டியின் சார்பில் 10 இடங்கள்,எடப்பாடி ஒன்றிய குழு சார்பில் 6 இடங்களில் கொடியேற்றி மே தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதேபோல், நங்கவள்ளி ஒன்றிய குழு சார்பில் 7 இடங்ள், ஆத்தூர் வட்ட குழு சார்பில் 12 இடங்கள் மற்றும் சங்ககிரி, மேட்டூர், ஏற்காடு, கெங்கவல்லி, மேச்சேரி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மே தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.இதேபோல், சிஐடியு சங்கத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் செங்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் சிஐடியு சுமைப்பணி சங்க மாநில பொதுச்செயலாளர் ஆர்.வெங்கடபதி, சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.கே.தியாகராஜன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று செங்கொடிகளை ஏற்றி வைத்தனர்.

ஈரோடு:
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கொடியேற்று நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.துரைராஜ் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் திரளானோர்கள் பங்கேற்றனர்.

இதபோல், பெருந்துறை, சூரம்பட்டி வலசு பகுதி, சுத்தானந்தன் நகர், சங்கு நகர், ஈரோடு கேஎம்சிஎச் கார்ஸ்டேன் அருகில், இபி அலுவலகம், ஈரோடு நகர கமிட்டி அலுவலகம், பவானி தாலுகா ஆப்பக்கூடல், ஜம்பை, பெரியமோளபாளையம், எம்.ஜி.ஆர்.நகர், சத்திய மூர்த்தி நகர், பேருந்து நிறுத்தம், சின்னியம்பாளையம், வாய்க்கால்பாளையம், மேல் மற்றும் கீழ் காலனி ஆகிய பகுதியில் கொடியேற்று விழா நடைபெற்றது. மேலும், சத்தியமங்கலம் தாலுகா அலுவலகம், கோட்டுவீராம்பாளையம் பேருந்து நிறுத்தம், வடக்குபேட்டை, புதிய பேருந்து நிறுத்தம் ஆகிய பகுதிகளில் செங்கொடி ஏற்றப்பட்டது. ஈரோடு தாலுகா நசியனூர், சத்தி மலைக்கமிட்டி, சார்பில் கடம்பூர், எக்கத்தூர், நகலூர், உகினியம், பத்திரிபடுகை, கரளையம், காடகநல்லி, கிளாத்தூர், பெரிய மற்றும் சின்ன சாலட்டி, மூலக்கடம்பூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் கொடியேற்று நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

அந்தியூர் தாலுகா மற்றும் கோபி தாலுகா பகுதியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்று விழா நடைபெற்றது. மேலும், சிஐடியு சங்கத்தின் சார்பில் சிஐடியு மாவட்டக் குழு அலுவலகம், போக்குவரத்து பணிமனைகள், மின் மற்றும் சுமைப்பணி தொழிலாளர்கள் சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. இதேபோன்று ஊரக வளர்ச்சித்துறை, குடிநீர் வடிகால் ஊழியர்கள் உட்பட மாவட்டம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்று விழாக்கள் நடைபெற்றது.

Leave a Reply

You must be logged in to post a comment.