வாரனாசி :

உத்திரபிரதேச மாநிலத்தின் இடைநிலை, பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளின் முடிவுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியானது. இந்த தேர்வில் தேர்ச்சி சதவீதம் கடந்த 10 வருடங்களில் இல்லாத அளவிற்கு கடும் வீழ்ச்சியை அடைந்துள்ளது.

இடைநிலை வகுப்பில் 52 பள்ளிகள் , பத்தாம் வகுப்பில் 98 பள்ளிகள் என மொத்தம் 150 பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் என்பது பூச்சியம். அதாவது ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை. காசிப்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 17 பள்ளிகள், அதற்கு அடுத்தபடியாக ஆக்ராவில் 9 பள்ளிகள் எந்த தேர்ச்சியும் பெறவில்லை.

மேலும், 237 பள்ளிகள் வெறும் 20 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சியை மட்டுமே பெற்றுள்ளன. கடந்த வருடம் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகள் முறையே 89.30% மற்றும் 84.32% என இருந்தவை தற்போது 81.09% மற்றும் 65.07% என சரிவடைந்துள்ளன.

உத்திரபிரதேச மாநிலத்தின் யோகி ஆதியானாத் தலைமையிலான பாஜக ஆட்சியின் ஒரு வருட சாதனை என பல பொய்யான தகவல்களை வெளியிட்டவர்களின் உண்மைமுகம் தொடர்ந்து கிழிந்து கொண்டே இருக்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.