கோவை,
செட்ஆப் பாக்ஸ்களை உடனடியாக தர நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு கேபிள் டிவி ஊழியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவையில் கேபிள் டிவி ஊழியர்களுக்கு சரியான முறையில் செட்ஆப் பாக்ஸ்கள் வழங்கப்படுவது இல்லை. இதனால் பொது மக்களுக்கு செட்ஆப்பாக்ஸ்கள் வழங்க முடியாமலும், அவர்களுக்கு உரிய பதில் அளிக்க முடியாமலும் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகிறோம். எனவே பிற மாவட்டங்களுக்கு வழங்குவது போல் கோவை மாவட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கும் முறையாக செட்ஆப் பாக்ஸ்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று அரசு கேபிள் டிவி ஊழியர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: