ஸ்ரீநகர்,
கத்துவா சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது ஒரு சாதாரணம் விஷயம் என்று காஷ்மீர் மாநில புதிய துணைமுதலவர் தெரிவித்துள்ளர். அவரது பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
கத்துவா சிறுமியை கோவில் பூசாரி உட்பட 8 பேர்  கோயில் கருவறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது சாதாரண விஷயம் என்று பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த புதிய துணை முதல்வர் கவிந்தர் குப்தா தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு சிறிய விஷயத்தை நாடே பேசும் படி பெரிய விஷயமாக மாற்றிக் இருக்கக்கூடாது என்று கூறியுள்ளார். அதோடு இந்த அல்ப விஷயத்துக்காக அமைச்சரவையில் இருந்து பாஜகவைச் சேர்ந்த 2 பேர் விலகியிருக்க வேண்டிய அவசியமும் இல்லை என்று திமிராக பேசி உள்ளார்.

கவிந்தர் குப்தாவின் கருத்து நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கண்டனக்குரல்கள் எழுந்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: