புவனேஸ்வர்
ஒடிசாவில் கடந்த 4 ஆண்டுகளில் 4749 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
ஒடிசா காங்கிரஸ் முதல்வர் தாராபிரசாத், பாஹினிபதி கடந்த 4 ஆண்டுகளில் மாநிலத்தில் பதிவான பாலியல் வழக்கு குறித்து எழுத்துபூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். இது குறித்து பேரவையில் கடந்த 2017 சிறுமிகளுக்கு எதிராக 1283 வழக்குகள் பதிவாகி உள்ளது. மேலும் 2016ல்1204 வழக்குகளும், 2015ல் 1212 வழக்குகளும் 2014ல் 1050 வழக்குகளும் பதிவாகி உள்ளது என்று என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.. கடந்த 4 ஆண்டுகளில் 4749 சிறுமிகளுக்கு எதிரான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய 4462 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒடிசா மாநில காவல் துறையில் கடந்த 2014 முதல் 2017 வரை கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 2017ல்92 வழக்குகளும், 2016ல் 93 வழக்குகளும், 2015ல் 109 வழக்குகளும், 2014ல் 91 வழக்குகளும் பதியப்பட்டுள்ளதாக பேரவையில் நவீன் பட்நாயக் எழுத்துபூர்வமாக தெரிவித்துள்ளார்.
கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள 752 நபர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தகவல் சேகரித்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் 12 வயதுக்கு குறைவான சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்குகளில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.