கோவை,
இந்து முன்னணி அமைப்பினர் ஆட்டோ தொழிலாளர்களிடையே மோதலை உருவாக்க திட்டமிட்டு விஷம செயலை செய்து வருவதாக ஆட்டோ ஓட்டுநர்கள் கோவை மாநகர காவல் ஆணையரை சந்தித்து திங்களன்று புகார் அளித்தனர்.

இதுகுறித்து ஆர்.வி.மற்றும் ஆனந்தபவன் சிஐடியு ஆட்டோ ஸ்டேண்டு ஓட்டுநர்கள் சார்பில் கொடுத்த புகாரில் தெரிவித்திருப்பதாவது, கோவை காந்திபுரம் அடையார் ஆட்டோ ஸ்டேண்டில் சுமார் 20 வருடத்திற்கும் மேலாக 60க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் வாகனங்களை நிறுத்தி ஆட்டோ ஓட்டிவருகிறோம். பல அரசியல் கட்சிகள் இருந்தாலும் அவரவர்களின் தொழிற்சங்களின் சார்பில் இயங்கி வருகிறோம். இந்நிலையில் திடீரென இந்து முன்னணி அமைப்பைசேர்ந்த சிவக்குட்டி என்பவர் இந்து ஆட்டோமுன்னணி என்கிற அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு இங்கு ஒற்றுமையாக உள்ளஆட்டோ தொழிலாளர்களிடம் பிரச்சனையை ஏற்படுத்தி வருகிறார்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் உரிய நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டனர். இதற்கிடையே இவர் பல்வேறு சமூக விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு பல்வேறு முறை சிறைக்கு சென்றவர் என்பதால் தற்போது பல சமூக விரோதிகளோடு இணைந்து மீண்டும் ஆட்டோ ஓட்டுனர்களிடையே பிரச்சனையை ஏற்படுத்தி வருகிறார். ஆகவே, ஒற்றுமையோடு இயங்கும் ஆட்டோ ஓடனர்கள் மத்தியில் மோதலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடும் இவர் மீது உரிய நடவடிகக்கை எடுக்க வேண்டும்.மேலும், இவரின் பின்னணியில் இருந்து இந்து முன்னணி அமைப்பின் தலைவர்கள் ஆலோசனை அளித்து வருவதன் காரணமாகவே இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுகிறார். ஆகவே, இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் மனுவினை சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் கோவை மாவட்ட பொதுச்செயலாளர் பி.கே.சுகுமாறன், ஆர்.வி.ஸ்டேன்டு செயலாளர் செல்வம் உள்ளிட்ட ஆட்டோ சங்க தலைவர்கள் அளித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: