ஈரோடு,
மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு தடை விதிக்கக்கோரி திங்களன்று ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் அய்யாக்கண்ணு மனு அளித்தார். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் திங்களன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகரிடம் அளித்தமனுவில் கூறியிருப்பதாவது :- விவசாய விலை பொருள்களுக்கு லாபகரமான விலை கொடுக்காமல், சாகுபடி செய்ய தண்ணீரு கொடுக்காமலும் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளை ஏமாற்றி வருகிறது. வாங்கிய கடனைகட்ட முடியாததால், விவசாயிகள் தங்களுது நிலங்களை விற்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் பெற்று மரபணு மாற்றப்பட்ட விதைகள் மூலம் உற்பத்தி செய்த உணவுபொருள்களை மக்களுக்கு விற்பனை செய்திடும் அபாயம் எழுந்துள்ளது. ஆகவே, மத்திய அரசு அனைத்து விவசாய கடனையும் தள்ளுபடி செய்திட வேண்டு. கூட்டுறவு சங்கங்களில் அனைத்து விவசாயிகளுக்கு கடன் கிடைக்கவும், காப்பீடு, நஷ்டஈடு கிடைக்கவும் உதவிட வேண்டும். 60 வயதடைந்த அனைவருக்கும் மாத ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் நொய்யல், பவானி, காவிரி ஆகியவைகளில் சாயக்கழிவும், சாக்கடை கழிவுகளும் நேரடியாக கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டு. கரும்பு நிலுவை தொகையை உடனடியாக வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்
பன உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

Leave A Reply

%d bloggers like this: