ஈரோடு,
பணிச்சுமையை குறைக்கக்கோரி கிராம சுகாதார செவிலியர்கள் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட பணிகளில் இருந்து கிராம சுகாதார செவிலியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். பணிச்சுமையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்களன்று தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் சார்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் விசாலாட்சி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் லதா முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் செந்தாமலர், உஷாராணி, பகுதிசுகாதார செயலர் சாரதாம்பாள் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கிடு, சுகுமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முடிவில் மாவட்ட நிர்வாகி புஷ்பா நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுகாதார செவிலியர்கள் திரளானோர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கமிட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.