கோவை,
நெல்லை, செங்கோட்டை ரயில்களை ரத்து செய்ததை கண்டித்து கோவை ரயில்நிலையத்தை அனைத்து கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையிலிருந்து நெல்லைக்கும், செங்கோட்டைக்கும் கோடை கால சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் போதிய பயணிகள் இந்த ரயிலில் ஏறவில்லை எனக்கூறி இன்று முதல் (மே 1) இந்த ரயில்களை ரத்து செய்யப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தென் மாவட்ட மக்களின் பயணத்திற்கு உகந்த இந்த ரயில்களை ரத்து செய்யக்கூடாது என்றும், தவறான புள்ளிவிபரங்களை அளித்த தென்னக ரயிலவே நிர்வாகத்தை கண்டித்தும் திங்களன்று கோவை ரயில் நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மதிமுகவின் கிருஷ்ணசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் சுசி.கலையரசன், வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் மாணிக்கம், எஸ்டிபிஐ கரீம், புரட்சிகர முன்னணி மலரவன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். மேலும், இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம், கிழக்கு நகரக்குழு செயலாளர் என்.ஜாகீர் உள்ளிட்ட அனைத்து கட்சியைச் சேர்ந்த ஏராளமான கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.