ஈரோடு,
டி.டி.சி.பி. அப்ரூவல் செய்யவிண்ணப்பிப்பதற்கான காலஅவகாசத்தை நீட்டிக்க வலியுறுத்தி நிலத்தரகர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர்.

இதுதொடர்பாக ஈரோடு அரசு மருத்துவமனை அருகே இருந்து இந்திய தேசிய ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், லேண்ட் டெவலப்பர்ஸ், நிலத்தரகர்கள் நலச்சங்கத்தைச் சேர்ந்தோர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.மணிவண்ணன் தலைமையில் திங்களன்று பேரணியாக சென்றுமாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர். இம்மனுவில் கூறியிருப்பதாவது: அரசின் அங்கீகாரம் பெறாதவீட்டுமனைகளை வரைமுறைப்படுத்துவதற்காக டி.டி.சி.பி. அப்ரூவல் பெற வரும் மே 3 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே ரியல் எஸ்டேட் தொழில் கடந்த சில ஆண்டாக மிகவும் நசிந்து, வீட்டுமனைகள் விற்பனையாகாமல், சிரமத்தில் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டாக டி.டி.சி.பி., அப்ரூவல் ஆகாமல் நிலங்களை விற்கவும் முடியாமல் கட்டடங்கள் கட்டவும் முடியாமல் சிரமமான நிலை உள்ளது.

இச்சூழலில், குறுகிய கால அவகாசம் கெடுத்து டி.டி.சி.பி., அப்ரூவலுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பிரச்சனையால் பல லட்சம் மதிப்பிலான நிலங்கள் விற்பனைக்கு வழி இன்றி உள்ளது. ஆகவே, இந்த அவகாசத்தை மே 3 ஆம் தேதி என்றிருப்பதை மாற்றி, மேலும் சிலவாரங்கள் கால நீட்டிப்பு செய்துவிண்ணப்பம் செய்ய அவகாசம் வழங்க வேண்டும். அப்போதுதான், முழு அளவில் விண்ணப்பம் செய்து, இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்என மனுவில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: