திருப்பூர்,
திருப்பூர் ஆண்டிபாளையம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்யச் சென்ற மார்க்சிஸ்ட் கட்சியினரிடம் கோஷம் போட்டுத் தகராறு செய்ய வந்தாயா என ஒருமையில் துடுக்குத்தனமாக பேசிய காவல் அதிகாரியைக் கண்டித்து அனைத்துக் கட்சியினர் முற்றுகையிட்டனர்.

திங்களன்று ஆண்டிபாளையம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்திற்கு வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வீனஸ் தண்டபாணி, ஆர்.காளியப்பன், கருப்புசாமி,இடுவாய் இந்திரராணி பழனிசாமி, ஓ.எஸ்.ரத்தினசாமி, சொக்கப்பன்,சித்ரா சுந்தரம், சீராணம்பாளையம் பூந்தோட்டம் முருகேசன், சின்னாண்டிபாளையம் பிரகாஷ், இடுவாய் தமிழரசு, அ.ப.பாலசுப்பிரமணியம் ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்தனர். இடுவாய் தியாகி கே.ரத்தினசாமி நினைவகத்தில் இருந்து வேட்புமனுத் தாக்கல் ஊர்வலம்தொடங்கி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு வந்தனர். ஆனால் வேட்புமனுத் தாக்கல் செய்ய வரிசையில் வர வேண்டும் எனச் சொல்லி தேர்தல் அலுவலர் ஒவ்வொருவருக்கும் மிகுந்த கால தாமதம் செய்தார். இதனால் நேரம் கடந்து பலர் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்படும் சூழல் உருவானது.

இதையடுத்து ,மார்க்சிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் இது குறித்து தேர்தல் அதிகாரியிடம் விரைந்து அனைவரிடமும் மனுப் பெற ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர். ஆனால் அப்போது அங்கிருந்த காவல் துறை அதிகாரி, கோஷம் போட்டு தகாராறு செய்ய வந்தாயா என ஒருமையில்மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் சி.மூர்த்தியிடம் துடுக்குத்தனமாகப் பேசியதுடன் கைது செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். பாதுகாப்புக்கு வந்த காவல் துறை அதிகாரியின் பொறுப்பற்ற இந்த நடவடிக்கைக்கு அனைத்துக் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்து அவரை முற்றுகையிட்டனர். இதன் பிறகு கூட்டுறவு துணைப் பதிவாளர் உள்ளிட்ட அதிகாரி
களிடம் பேசி, வேட்பு மனுக்களை விரைந்து அனைவரிடமும் பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து மொத்தம் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 43 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

Leave A Reply

%d bloggers like this: