ஏற்காடு,
மலர் கண்காட்சிகாக தயார் செய்யப்பட்டு வரும் பூந்தொட்டிகளில் பூத்துள்ள மலர்களை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு செல்கின்றனர்.

தமிழகத்தின் பிரதான சுற்றுலா தலங்களில் ஒன்றான ஏற்காட்டில் ஆண்டுதோறும் கோடை காலங்களில் கோடைவிழா மற்றும் மலர்கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டு நடைபெற உள்ள மலர்கண்காட்சியை முன்கூட்டியே மே மாதம் இரண்டாவது வாரத்தில் நடத்த மாவட்ட நிர்வாக முடிவெடுத்து அதற்கான பணிகள் விரைந்து நடைப்பெற்று வருகிறது.

அதன்படிமலர்கண்காட்சி நடைபெறும் அண்ணா பூங்காவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூந்தொட்டிகளை ஊழியர்கள் தயார்செய்து பராமரித்து வருகின்றனர். அங்கு மேரி கோல்டு, ப்ரஞ்ச் மேரி கோல்டு, ஜினியா, காஸ்மாஸ், கேலண்டுல்லா, சலிசம், வின்கா, சால்வியா, பேன்சி, டேலியா, ப்ளாஸ்க், ஸ்பெத்திக்குல்லம், வெர்பினா, ஜெரோனியம், பாலிசம், ஆந்தூரியம், கிரிசோந்தியம் உள்ளிட்ட மலர்ச் செடிகள் பூந்தொட்டிகளில் விதைக்கப்பட்டிருந்தது. தற்போது , இந்த பூச்செடிகளில் பூக்கள் பல்வேறு வண்ணங்களில் பூத்து குலுங்குகிறது. ஊழியர்ள் இந்த பூந்தொட்டிகளில் உள்ள கழைகளை அகற்றி வருகின்றனர். மேலும் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த அழகிய மலர்களை ஆர்வத்துடன் கண்டு செல்கின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.