திருநெல்வேலி,
கூடங்குளம் அணுமின்நிலையத்தில் 2ஆவது அணு உலையில் எரிபொருள் நிரப்புவதற்காக ஏற்கெனவே மின்உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் முதலாவது அணுஉலையிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மின்தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ஆயிரம் மெகாவாட் திறன்கொண்ட 2 அணுஉலைகள் செயல்பட்டு வருகிறது. இதில் 2ஆவது அணு உலையில் வருடாந்திர பராமரிப்புப் பணிக்காகவும், எரிபொருள் நிரப்பவும் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. 2 ஆவது அணுஉலையில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள்நடைபெற்று வருகிறது.இந்நிலையில் முதலாவது அணுஉலையில் வால்வு கசிவு ஏற்பட்டதை அடுத்து அதிலும் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பழுது விரைவில் சரிசெய்யப்பட்டு மின்உற்பத்தி தொடங்கப்பட்டுவிடும் என அணுமின்நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.