தேன்கனிக்கோட்டை,;
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா தளி அருகே உள்ள கல்கேரி தலித் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (42). மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளராக இருந்து வந்தார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த மாற்று சமூகத்தை சேர்ந்த முருகேசனும் (46) நண்பர்கள். கடந்த 19 ஆம் தேதி தனது இரு சக்கர வாகனத்தில் சுரேசை அழைத்துச்சென்றுள்ளார் முருகேசன்.

அன்றைய தினம் இரவு 8 மணிக்கு வீட்டிற்கு போன் செய்த சுரேஷ் தனது மனைவி, மகளிடம் பேசியுள்ளார். அப்போது இன்னும் அரை மணி நேரத்திற்குள் வீட்டிற்கு வந்துவிடுவதாக கூறியுள்ளார். ஆனால், இரவு 10 மணி வரைக்கும் வீடு திரும்பவில்லை. இதற்கிடையில், பல முறை போன் செய்தும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. சுரேசை அழைத்துச் சென்ற முருகேசனிடமிருந்தும் எந்த தகவலும் வரவில்லை. இதனையடுத்து, பல இடங்களில் தேடியும் சுரேஷ் கிடைக்கவில்லை. பிறகு, காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. இதற்கிடையே, முருகேசனை கண்டுபிடித்து கேட்டபோது முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார். இதனால், அவர் மீது பலத்த சந்தேகம் ஏற்பட்டது.

இந்த நிலையில், ஜவளகிரி ஜல்லி மாரியம்மன் கோவில் வனப்பகுதியில் அழுகிய நிலையில் சுரேஷ் பிணமாக மீட்கப்பட் டார். இது குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை துணை காவல் கண்கானிப்பாளர் சங்கர், தளி காவல் ஆய்வாளர் சுப்பிரமணி மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சுரேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். யானை தாக்கி இறந்ததாக காவல்துறை மற்றும் முருகேசன் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், அதற்கான தடயங்கள் இல்லை. ஆலய நுழைவு போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர் என்பதால் அவரை திட்டமிட்டு நயவஞ்சகமாக கடத்திச் சென்று கொலை செய்திருக்கிறார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவும் தெரிவித்தது. மேலும், இந்த சம்பவத்தை தீவிரமாக விசாரணை செய்து குற்றவாளிகள் அனைவரையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால், இந்த சம்பவத்தை திசை திருப்பும் முயற்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையும் அமைதியாக இருந்தது. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முதல் கட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டம் முழுமைக்கும் ஏப்.26 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், குடிபோதையில் இருந்த முருகேசன் சுரேசின் நெஞ்சில் கல்லைபோட்டு கொலை செய்திருப்பதாக காவல்துறை யினர் நடத்திய விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இதனைய டுத்து, முருகேசனை கைது செய்துள்ள காவல்துறையினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக் கிறார்கள்.  இதன் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்திற்கு முதல் கட்ட வெற்றி கிடைத்திருக்கிறது என்றும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை வழங்க வேண்டும், படுகொலை செய்யப்பட்ட சுரேசின் குடும்பத்திற்கு உரிய நிவாரணமும் கொடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். ஜெயராமன் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

You must be logged in to post a comment.