சேலம்,
கல்கேரி மார்க்சிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் சுரேஷ் சாதி ஆதிக்க வெறியர்களால் படுகொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கல்கேரி கிராமத்தில் தலித் மக்களை கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்ததை எதிர்த்து, மக்களைத் திரட்டி கோவில் நுழைவுப் போராட்டத்திற்கு கல்கேரி சிபிஎம் கட்சியின் கிளை செயலாளர்  தோழர் சுரேஷ் உள்ளிட்ட முன்னணி ஊழியர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்நிலையில் , கடந்த சில தினங்களுக்கு முன்பு சாதிய ஆதிக்க சக்தியினரால் மர்ம மான முறையில் சுரேஷ் படுகொலை செய்யப்பட்டார். இக்கொடுஞ் செயலைக் கண்டித்தும், வன்கொடுமை தடுப்பு வழக்கில் கொலை வழக்காக மாற்றி குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யக் கோரியும், பாதிக்கபட்ட சுரேஷ் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் கோரியும் ஞாயிறன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிபிஎம் கட்சியின் வடக்கு மாநகர குழு மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாநகரக்குழு உறுப்பினர் என்.பிரவீன்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஜோதிலட்சுமி கண்டன உரை யாற்றினார். மாநரக்குழு உறுப்பினர்கள் வி.வெங்கடேஷ், வி.முருகானந்தம், ஆர்.வி.கதிர்வேல், ஜி.தேவி, தீ.ஒ.முன்னணி நிர்வாகிகள் டி.ஞானவேல், எஸ்.சசிக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

கோவை;
இதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை அன்னூர் ஒன்றியக்குழுவின் சார்பில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி அன்னூரில் ஞாயிறன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அன்னூர் பயணியர் மாளிகை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் முகமதுமுசீர் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஆறுச்சாமி கண்டன உரையாற்றினார். முன்னதாக சுரேஷை படுகொலை செய்த குற்றவாளிகளை கைது செய், படுகொலை மூடி மறைக்கும் காவல்துறையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதில் கட்சியின் அன்னூர் ஒன்றியக்குழு உறுபபினர்கள் சத்தியராஜ், மணிகண்டன், சுகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.