திருநெல்வேலி,
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளை மூடும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும் இல்லையென்றால் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என நெல்லையில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது.

நெல்லையில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க மாநிலத்தலைவர் மணிமேகலை தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் ச.மயில் மாநிலச் செயலாளர் முருகேசன், மாவட்டச் செயலாளர் பால்ராஜ் கலந்து கொண்டு பேசினர். அதைத் தொடர்ந்து ச.மயில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக அரசின் புதிய அறிவிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் சுமார் 3,500 அரசு ஆரம்ப பள்ளிகள் அரசு உதவிபெறும் பள்ளிகள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன. ஆங்கில வழி பள்ளிகளின் வளர்ச்சியால் அரசுப் பள்ளிகளில் மாணவ,மாணவிகளின் எண் ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் இந்த பள்ளிகளை மூடி அதில் நூலகம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. அப்படி ஒரு நிலை வந்தால் கிராமப்புறத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். எனவே, தமிழக அரசு உடனடியாக புதியதாக ஆங்கிலப் பள்ளிகளின் அங்கீகாரத்தை நிறுத்த வேண்டும்.

நெல்லை மாவட்டத்தில் மட்டும்54 பள்ளிகள் மூடப்படும் அபாயத்தில்உள்ளன. இதனால் இந்த பள்ளிகளில்பணியாற்றும் 564 ஆசிரிய ,ஆசிரியைகள் வெளி மாவட்டங்களில் பணியாற் றும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே,தமிழக அரசு பள்ளிகளை மூடும் நடவடிக்கையை கைவிட வேண்டும், இல்லையென்றால் மிகப் பெரிய போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்படும் என்றார்.

Leave A Reply

%d bloggers like this: