பஞ்சாயத்துத் தேர்தலில், சிபிஎம்-ஐ ஆதரித்து சுவர் விளம்பரம் எழுதிக்கொண்டிருக்கும் இந்த தாயின் பெயர் தோழர் சிதாமணி ஸோரன்…

2009 ஜூன் 11 அன்று மேற்குவங்கத்தில் மாவோயிஸ்டுகளால் கடத்திப் படுகொலை செய்யப்பட்ட தோழர் சால்க் ஸோரனின் தாயார்…

தனது மகனின் தியாகக் குருதியால் சிவந்த செங்கொடியை கையிலேந்தி அவர் வாழும் பகுதியில் கட்சிக்காக போர்க்குணத்துடன் பணியாற்றி வருகிறார் அந்த வீரத்தாய்…

“எனக்கு இன்னொரு மகன் இருந்திருந்தால்… அவனையும் இயக்கத்திற்காக கொடுத்திருப்பேன்” என்று கேரளத்தைச் சேர்ந்த தியாகி ரோஷனின் தந்தை வீர முழக்கமிட்டார். அந்த வீரப்பரம்பரையில் தோழர் சிதாமணி ஸோரனும், தனது மன உறுதியை காட்டியிருக்கிறார்.

மகன் சிறைக் கொட்டடியில் இருக்கும்போது, துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து தனது மகனின் பணியை முன்னெடுத்த பாவெலின் “தாய்” நீலோவ்னாவை நினைவுபடுத்துகிறார்.
மகனின் இழப்பு கொடுத்த துயரத்தையும் மீறி தள்ளாத வயதிலும் செங்கொடி ஏந்தி இயக்க வேலைகளை செய்யும் மனவுறுதியை ஈடுசெய்யும் தியாகம் வேறு எது இருக்க முடியும்?
வங்கமண்ணில் செங்கொடி இயக்கம் மீண்டும் உயரும் என்பதற்கு உங்களைப் போன்ற, உறவுகளை இழந்தும் மனவுறுதியுடன் களப்போராட்டத்தை முன்னெடுக்கும் வீரத்தாய்மார்களின் வீரமே ஆதாரம்…

லால் சலாம்..!

– சதாசிவன்

Leave a Reply

You must be logged in to post a comment.