சென்னை,
சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் புதுவைக்கு ஒரு தீர்ப்பு தமிழகத்திற்கு ஒரு தீர்ப்பா என்று புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நேற்று கூறிய தீர்ப்பில் சபாநாயகர் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிவித்துள்ளது.
ஆனால் புதுவை மாநிலத்தை பொறுத்தவரை சபாநாயகர் உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியும் என்று கூறியுள்ளது. ஒரே மாதிரியான பிரச்சினையில் நீதிமன்றத்தில் 2 விதமான தீர்ப்பு வந்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக புதுவை கொறடா மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போது இந்த முரணான தீர்ப்பு பற்றி நாங்கள் வலியுறுத்துவோம். நீதிமன்றத்தின் 2 விதமான தீர்ப்பு பற்றி மக்கள் மன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என்ற கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: