எப்போதும் இல்லாத அளவுக்கு உயர் நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றம் வரை தீர்ப்புகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றன. ஒவ்வொன்றிலும் உள்நோக்கங்கள் அம்பலமாகின்றன. தார்மீக நெறிகள் சகட்டுமேனிக்கு அத்து மீறப்படுகின்றன. எல்லாமே மிக அப்பட்டமாக, தெனாவெட்டாக நடக்கிறது. இந்தியாவில் நடப்பது பாசிச ஆட்சி என்பதை நீதித்துறையின் சீரழிவுகள் அறிவிக்கின்றன.

ஆனாலும் மருட்டும் கண்களோடு, ’உஷ்’ என்று வாயில் கையை வைத்து, ‘அப்படியெல்லாம் பேசப்படாது’ என குழந்தைகளை மிரட்டும் டீச்சரின் குரல்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. நீதித்துறையை விமர்சிக்கக் கூடாதாம், நீதிபதிகளை கேள்வி கேட்கக் கூடாதாம். ’தெய்வக்குத்தம்’ ரேஞ்சில் இங்கு பதறுகிறார்கள்.

அட போங்கய்யா…!
பஸ்ஸில், ரோட்டில், டீக்கடைகளில், சலூன் கடைகளில் என மக்கள் நின்று புழங்கும் இடங்களில், ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள முடிந்த பொதுவெளிகளில் எல்லாம் சர்வ சாதாரணமாக நீதித்துறையை இந்திய மக்கள் காறித்துப்பி அர்ச்சனை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

Mathavaraj

Leave a Reply

You must be logged in to post a comment.