புவனேஸ்வர்,
ஒடிசாவில் ஓடும் ரயிலில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசா மாநிலம் ஜார்சுகுடா ரயில் நிலையத்திலிருந்து கேரள மாநிலம் ஆழப்புழா நோக்கி ஆலப்பி-தன்பந்த் விரைவு ரயில் புறப்பட தயாராக இருந்தது. ஜார்சுகுடா ரயில் நிலையத்தில் ரயில் நின்றுகொண்டிருக்கும் போது S-3 குளிர்சாதன பெட்டியில், உள்ள 71வது இருக்கைக்கு அடியிலிருந்து பையிலிருந்து திடீரென புகை கிளம்பியது.
இதைத்கண்ட பயணிகள் அலறியடித்து ரயில் பெட்டியில் இருந்து வெளியேறினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வெடிகுண்டு நிபுணர்களுடன் வந்த ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் S-3 பெட்டியில் சோதனை நடத்தினர். அப்போது சக்திவாய்ந்த 7 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.