கொல்கத்தா,
மேற்கு வங்க மாநிலத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் தக்‌ஷின் தினஜ்பூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எந்த வித உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட வில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
நில நடுக்கத்தின் மையப்புள்ளி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

Leave a Reply

You must be logged in to post a comment.