கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் மினி லாரி மற்றும் கார் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தென்முகத்துவிளை பகுதியை சேர்ந்தவர் கிரிஸ்டோபர். இவர் தனது நண்பர்களுடன் காரில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். இவர்கள் பெரம்பலூர் மாவட்டம் சின்னாறு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவற்றில் ஏறி மறுபுறத்திற்கு சென்றது. அப்போது எதிரே வந்த மினி லாரி மீது மோதி விபத்துக்குள்ளாது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply