நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் நடுவர் வீதியில் உள்ளது நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் வங்கி 2017-2018 ஆம் ஆண்டிற்கான நாகைப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளின் பயிர்க் காப்பீட்டுத் தொகையான ரூ.2 கோடியே, 71 லட்சத்து, 30 ஆயிரத்து, 398 தொகையை, அரசு அதிகாரிகளின் உதவியுடன் இந்த வங்கி கையாடல் செய்துள்ளது.

இதனை வன்மையாகக் கண்டித்தும் கையாடல் செய்த தொகையை விவசாயிகளுக்கு மீட்டுத் தருமாறும் வலியுறுத்தியும் கையாடலில் தொடர்புள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரி, வியாழக்கிழமை அன்று, நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் வங்கி முன்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட, அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

Leave a Reply

You must be logged in to post a comment.