திருப்பூர்.
திருப்பூர் நெருப்பெருச்சல் பகுதியில் பழுதடைந்த சாலைக்கு மார்க்சிஸ்ட் கட்சியினர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

திருப்பூர் மாவட்டம், தேட்டத்துப்பாளையத்திலிருந்து நெருப்பெருச்சல் செல்லும் சாலை கடந்த பல மாதங்களாக மிகவும் மோசமாக பழுதடைந்து காணப்படுகிறது. இதனை சீரமைக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் சார்பில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தபோதும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் வியாழனன்று பழுதடைந்த சாலைக்கு மார்க்சிஸ்ட் கட்சியினர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு கட்சியின் திருப்பூர் வடக்கு ஒன்றிய குழு உறுப்பினர் சிகாமணி தலைமை தாங்கினர். வடக்கு ஒன்றியக் குழுச் செயலாளர் கே.பழனிசாமி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பானுமதி, பிரதாப், மகாலிங்கம், கிளை செயலாளர் கணேசன், அழகு உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: