தேனி:
குரங்கணி காட்டுத் தீ விபத்தின் போது மீட்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட காவல் துறையைச் சார்ந்த 240 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை தேனி மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் வழங்கினார்.

கொட்டக்குடி காப்புவனம் குரங்கணி பகுதியில் கடந்த மார்ச் 11 அன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட காட்டுத் தீ விபத்தின் போது, சிறப்பான முறையில் மீட்பு பணியில் ஈடுபட்ட 1 ஆய்வாளர், 4 சார்பு ஆய்வாளர்கள், 41 ஆயதப்படை தலைமைக் காவலர் முதல் காவலர்கள், 12 நக்சல் தடுப்பு பிரிவு காவலர்கள், 182 பயிற்சி காவலர்கள் என மொத்தம் 240 காவல்துறையைச் சார்ந்தவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்டக்காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன், மாவட்ட துணைக் காவல் காண்காணிப்பாளர் (ஆயுதப்படை) ஜெயராமன், ஆய்வாளர்கள் சீனிவாசன், பரிமளாதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.