“முலாயம் ஆட்சிக்கு வந்தால் யாதவர்களை மட்டுமே கவனிப்பார், மாயாவதி வந்தால் ஜாதவர்களை மட்டுமே கவனிப்பார், நாங்கள் வந்தால் அனைவரையும் கவனிப்போம்” என்று பேட்டி கொடுத்திருக்கிறார் அமித் ஷா.(தி இந்து) உண்மை என்னவென்றால் பாஜக ஆட்சிக்கு வந்தால் உயர்சாதியினரை மட்டுமே கவனிக்கும். அகிலேஷ் உதாரணங்கள் கொடுத்திருக்கிறார். என்கவுன்டர் என்ற பெயரில் பல பேரை சுட்டுக் கொல்கிறதுல்லவா உ பியின் யோகிஅரசு, அவர்கள் எல்லாம் பிற்படுத்தப்பட்ட சாதியினர். உன்னோவ் வல்லுறவு வழக்கில் சம்பந்தப்
பட்டுள்ள பாஜகஎம்எல்ஏ உயர்சாதி என்பதால் அதை விசாரிக்க மட்டும் அந்தசாதியைச் சேர்ந்தவர்களாக நியமித்திருக்கிறார் யோகி. இது எப்படி இருக்கு? பாஜக ஆட்சியானது மனு(அ)தர்மப்படியான உயர்சாதியினரின் ஆட்சியே. இதை கர்நாடகாவிலும் கொண்டுவர தீவிர வேலையில் இறங்கியிருக்கிறார் அமித் ஷா. அதுமட்டுமல்ல, “கர்நாடக தேர்தல் தென்னிந்தியாவுக்கான வாசல்” என்றும்அறிவித்திருக்கிறார். தென்னகமே உஷார்..உஷார்.

ramalingam kathiresan

Leave A Reply

%d bloggers like this: