ஜோத்பூர்,
சாமியார் ஆசாராம் பாபு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் அவர் குற்றவாளி என்று ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சாமியார் ஆசாராம் பாபு ஆசிரமத்தில் தங்கி படித்த உத்திரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் பகுதியை சேர்ந்த சிறுமி ஆசாராம் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். தொடர்ந்து, பல பாலியல் குற்ற வழக்குகள் ஆசாராம் மீது குவிந்தன.

இதையடுத்து, கடந்த 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடை சட்டத்தின் கீழ் ஆசாராம் கைது செய்யப்பட்டு ராஜஸ்தான் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், ஷாஜஹான்பூர் சிறுமி தொடர்ந்த வழக்கில் 4 ஆண்டுகளாக நடந்த விசாரணை முடிந்து, இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆசாராம் உட்பட 3 பேரும் குற்றவாளிகள் என்று ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இத்தீரப்பு வெளியாவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கையாக ஷாஜஹான்பூரில் உள்ள பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜோத்பூரில் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. ஜோத்பூர் சிறையின் சுற்றுப்புறங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் டெல்லி, ராஜஸ்தான், குஜராத், ஹரியானா ஆகிய 4 மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் கலவரச் சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது என்ற அச்சத்தில் நீதிபதி ஆசாராம் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கே சென்று தீர்ப்பளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: