ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே உள்ள இரத்தமும் சதையுமான உணர்வுபூர்வமான உறவை களம் புரியாத உங்களின் முகநூல் விவாதங்களால் ஒன்றும் செய்து விட முடியாது என்றே நினைக்கிறேன்.

புதுக்கோட்டையில் நான் சந்தித்த தோழர் வெள்ளை வேஸ்டி சட்டையுடன் சிவப்பு துண்டை கம்பீரமாக போட்டு நெஞ்சை நிமிர்த்தி என்னிடம் சொன்னார்….
“நான் துப்புரவு பணியாளர் தான் ஆனா வேலை முடிஞ்சதும் இந்த சிவப்பு துண்டை போட்டு நடக்குறப்ப கிடைக்கிற தெம்பும் தைரியமும் மரியாதையும் வேற எதுலயும் கிடைக்காது தோழா’ன்னு……. அவரின் இந்த வார்த்தைகளை ஒரு போதும் உங்களால் புரிந்து கொள்ள முடியாது.

அது ஒரு பார்ப்பண கட்சின்னு புத்திஜீவிங்க நீங்கெல்லாம் சொல்றேங்க…..ஆனா சாமனிய மக்கள் இவனுங்க “தலித்து கட்சிகாரனுங்க”ன்னு தான் இயல்பா இப்பவும் எங்க ஊர்கள்ல அடையாளபடுத்துறாங்க…..!

Divya Bharathi

Leave A Reply

%d bloggers like this: