திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ.28 கோடி மதிப்பில் 1,214 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு காண தேசிய சட்டப் பணிகள் ஆணையம் உத்தரவிட்டது. அதன்பேரில், மக்கள் நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருப்பூர், தாராபுரம், அவிநாசி, காங்கயம், பல்லடம், உடுமலை உள்ளிட்ட 6 வட்டார நீதிமன்ற வளாகங்களில் 15 அமர்வுகளாக மக்கள் நீதிமன்ற நிகழ்வு நடைபெற்றது.

இதில், மோட்டார் வாகன விபத்து, வங்கிக் கடன், இன்சூரன்ஸ், சொத்து பிரச்சனை, காசோலை மோசடி, குடும்ப நல வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் சமரசத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. திருப்பூர் மாவட்டம் முழுவதும் மொத்தம் 2 ஆயிரத்து 555 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 1,214 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.28 கோடியே 22 லட்சத்து 50 ஆயிரத்து 904 ஆகும்.

Leave A Reply