திருப்பூர்,
திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள பின்னல் புத்தக அலுவலகத்தில் திங்களன்று உலக புத்தக தின விழா கொண்டாப்பட்டது.

இவ்விழாவில் புத்தக வாசிப்பின் அவசியம் குறித்தும், உலகின் பல்வேறு நாடுகளில் புத்தகங்களினால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் பின்னல் புத்தகாலய பொறுப்பாளர் சௌந்தரபாண்டியன் விளக்கி பேசினார். இந்த நிகழ்வில் ஆர்.ஏ.ஏஜென்சி ஜெயபால், அரிமா மு,ஜீவானந்தம், யுனிவர்செல் பழனிசாமி, மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் நந்தகோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply