திருப்பூர்,
திருப்பூரில் கூட்டுறவு சங்கத் தேர்தலில் எதிர்கட்சியினரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல்களில் நடைபெற்ற முறைகேடுகளை தொடர்ந்து, தேர்தலுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் அந்த தடையை விலக்கியதை அடுத்து மீண்டும் பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் தேர்தல் பணிகள் துவங்கியுள்ளன. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம், அங்கேரிபாளையத்தை அடுத்துள்ள செட்டிபாளையத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் செவ்வாயன்று தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. இதில் அதிமுகவை தவிர்த்த மற்ற வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக நிராகரிப்கப்பட்டது.

இதற்கான காரணத்தை தேர்தல் நடத்தும் அலுவலர் முறையாக தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.இதனால் ஆவேசமடைந்த வேட்பாளர்கள் மற்றும் எதிர் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கூட்டுறவு சங்க வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தேர்தல் அலுவலர்களை கண்டித்து முழக்கங்களை எழுப்பியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.