திருப்பூர்,
குரூப்-2 பணி தேர்வு பெற்றவர்களின் சான்றிதழ்கள் வலைதளத்தில் பதிவேற்றம் பணி துவங்கியது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2 ஏ பணி தேர்வில் தேர்வானவர்களின் சான்றிதழ்கள் வலைதளத்தில் பதிவேற்றும் பணியினை திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி தொடங்கி வைத்தார். இதன்பின் அவர் பேசுகையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் அனைத்து  தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தின் சார்பில் செயல்படும் அனைத்து அரசு பொது சேவை மையங்களிலேயே பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு நேரில் செல்ல வேண்டியதில்லை.

இதன் முதற்கட்டமாக தற்போது குரூப்-2 ஏ பணி தேர்வு பெற்றவர்களின் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யும் பணி நமது மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியரகம், மாநகராட்சி மற்றும் மண்டல அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் உள்ள அரசு பொது சேவை மையங்களில் சான்றிதழ் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கு ஒரு பக்கத்திற்கு ரூ.5 மட்டும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: